181
தமிழ்நாடு ஆளுநராகப் பணியாற்றி வந்த பன்வாரிலால் புரோகித் பஞ்சாப் ஆளுநராக மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக நாகாலாந்து ஆளுநராக பதவிவகித்த ரவீந்திர நாராயண் ரவி புதிய தமிழ்நாடு ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அண்மையில் பன்வாரிலால் புரோகித்துக்கு பஞ்சாப் ஆளுநர் பொறுப்பு கூடுதலாகக் கொடுக்கப்பட்ட நிலையில் சில நாட்களுக்கு முன் பன்வாரிலால் டெல்லி சென்று பிரதமர், உள்துறை அமைச்சர் ஆகியோரைச் சந்தித்தார். இந்த நிலையில் நேற்று (செப்டம்பர் 9) குடியரசுத் தலைவர் வெளியிட்ட உத்தரவில் இந்த ஆளுநர் மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
Spread the love