Home இலங்கைவல்வை கொலை சந்தேக நபர் மூன்று வாரங்களின் பின் திருகோணமலையில் கைது

வல்வை கொலை சந்தேக நபர் மூன்று வாரங்களின் பின் திருகோணமலையில் கைது

by admin

வல்வெட்டித்துறை வல்வெட்டியில் குடும்பத்தகராறு காரணமாக 2 பிள்ளைகளின் தந்தையை கத்தியால் குத்திக் கொலை செய்துவிட்டு தப்பித்த உறவினர்களில் ஒருவர் 3 வாரங்களின் பின்னர் இன்று திருகோணமலையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். மற்றையவர் தொடர்ந்து தலைமறைவாகியுள்ளார்.

கடந்த ஓகஸ்ட் 17ஆம் திகதி நள்ளிரவு 12.30 மணிக்கு இந்தச் சம்பவம் இடம்பெற்றது.
சம்பவத்தில் சுப்பிரமணியம் கிருசாந்தன் (வயது-30) என்ற 2 பிள்ளைகளின் தந்தையே கொல்லப்பட்டுள்ளார்.

கொலையில் ஈடுபட்டவர்களான உறவினர்கள் இருவர் தலைமறைவாகிய நிலையில் தேடப்பட்டு வந்தனர்.

சந்தேக நபர்களில் ஒருவர் திருகோணமலை காவல்துறைப் பிரிவில் தலைமறைவாகி உள்ளதாக காங்கேசன்துறை பிராந்தியத்துக்குப் பொறுப்பான சிறப்புக் குற்றத் தடுப்புப் பிரிவினருக்கு கிடைத்தது. தற்போதை கொவிட்-19 நிலமை காரணமாக அங்கு சென்று சந்தேக நபரைக் கைது செய்ய முடியாத நிலையில் திருகோணமலை காவல் நிலைய பொறுப்பதிகாரிக்கு தகவலளிக்கப்பட்டது.

திருகோணமலை காவல்துறையினர் எடுத்த நடவடிக்கையில் 41 வயதான சந்தேக நபர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். மற்றையவர் தொடர்பில் தகவல் கிடைக்காத நிலையில் தேடப்பட்டு வருகிறார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More