Home இலங்கைகட்டுத்துப்பாக்கி வெடித்ததில் இருவர் பலி

கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் இருவர் பலி

by admin

அநுராதபுரம் – திருப்பனே காவல்துறைப்பிரிவிற்கு உட்பட்ட முரியாகல்ல பகுதியில் நேற்று மாலை மிருக வேட்டைக்காக பயன்படுத்தப்படும் கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 60 மற்றும் 44 வயதுடைய இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர் எனத் தொிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியால் மூவர் நடந்து சென்று கொண்டிருநத வேளை இருவர் மீது துப்பாக்கி ப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாகவும் மூன்றாவது நபர் மீது இதனை ஊர்மக்களுக்கு அறிவிப்பதற்காக ஓடி சென்ற போது வேறு ஒரு கட்டுத் துப்பாக்கி வெடித்ததில் அவரும் காயங்களுக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவாிடமிருந்து . சந்தேகத்திற்கிடமான சில உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தொிவித்துள்ள முரியாகல்ல காவல்துறையினா் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனா்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More