Home இலங்கைபங்காளிகளை வென்ற சகோதரர் முடிவு – இணக்கமின்றி பேச்சுக்கள் முடிந்தன!

பங்காளிகளை வென்ற சகோதரர் முடிவு – இணக்கமின்றி பேச்சுக்கள் முடிந்தன!

by admin

ஆளும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பங்காளி கட்சிகளின் தலைவர்களுக்கும் பிரதமர் மஹிந்த ராஜபகஸவுக்கும் இடையில் நேற்று (23.09.21) இடம்பெற்ற பேச்சுவார்த்தை எவ்விதமான இணக்கப்பாடுகளும் இன்றி நிறைவடைந்துள்ளது.

கெரவலப்பிட்டிய யுகதனவ் மின் ஆலையில் 40 சதவீதமானவற்றை அமெரிக்காவின் நிறுவனமொன்றுக்கு வழங்கப்படுவதற்கான ஒப்பந்தம் கைச்சாதிடப்பட்டமை தொடர்பில் இந்தப் ​பேச்சுவார்த்தை நடைபெற்றது.

யுகதனவ் மின் ஆலை ​தொடர்பில் பதிலளித்த நிதியமைச்சர் பெசில் ராஜபஸ, இந்த முதலீட்டில் 250 மில்லியன் ​அமெரிக்க டொலர்கள் முதலீடு செய்யப்படவுள்ளன. இதனால் நாட்டுக்கு நன்மைக்கிடைக்கும் என எடுத்துரைத்தார்.

எனினும், அவருடைய பதிலில் பங்காளிகள் திருப்தியடையவில்லை. அதனால், இணக்கப்பாடு இன்றி நிறைவடைந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More