போர்முலா வன் கார் பந்தயப் போட்டியில் இங்கிலாந்தைச் சோ்நத மெர்சிடீஸ் அணி வீரா் லுயிஸ் ஹமில்டன் நேற்றையதினம் தனது நூறாவது வெற்றியை பதிவு செய்துள்ளாா். ரஷ்ய குரான் பிறீயில் நடைபெற்ற போட்டியினை முதலாமிடத்திலிருந்து ஆரம்பித்த மக்லரென் அணியின் லான்டோ நொரிஸ் இறுதிச் சுற்றுக்களின் போது மழையினால் டயர்கள் வழுக்கியதனால் தடுமாறிய நிலையில் ஹமில்டன் போட்டியினை வென்றிருந்தார்.
அத்துடன் போட்டியை 20ஆம் இடத்திலிருந்து ஆரம்பித்த றெட் புல் அணியின் மக்ஸ் வெர்ஸ்டப்பன் இரண்டாமிடத்தையும் பெராரி அணியின் கார்லோஸ் சைன்ஸ் மூன்றாமிடத்தையும் பெற்றுள்ளனா்.
இப்பந்தய முடிவில் 246.5 புள்ளிகளுடன் இவ்வாண்டுக்கான போர்முலா வன் சம்பியன்சிப் புள்ளிகள் பட்டியலில் ஹமில்டன் முதலாமிடத்தில் உள்ளார். 244.5 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் நெதர்லாந்தின் வெர்ஸ்டப்பனும், 151 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தில் மெர்சிடீஸ் அணியின் வல்ட்டேரி போத்தாஸும் உள்ளனா்.