தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு ஒக்டோபர் முதலாம் திகதி அதிகாலை 4 மணி முதல் நீக்கப்படும் என்று இராணுவத் தளபதி சவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் அறிவுறுத்தலுக்கமைய ஊரடங்கு உத்தரவு நீக்கப்படுவதாக தொிவித்துள்ள அவா் புதிய கட்டுப்பாடுகள் மற்றும் சுகாதார வழிகாட்டுதல்கள் தொடா்பில் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.