ஈகுவடார் நாட்டின் கயாகுயில் எனும் நகரிலுள்ள சிறைச்சாலையொன்றில் இரு போதைப்பொருள் கடத்தல் குழுக்களிடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக வெடித்ததில் 116 போ் உயிாிழந்துள்ளதுடன் 52 பேருக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் எனவும், தொிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் (28) ஏற்பட்ட இந்தக் கலவரத்தில் பலரது தலைகள் துண்டிக்கப்பட்டும், துப்பாக்கியால் சுடப்பட்டும் கொல்லப்பட்டுள்ளனா் எனத் தொிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது காவல்துறையினா் மற்றும் இராணுவத்தினா் இணைந்து கலவரத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாகவும் தொிவிக்கப்படுகின்றது