நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் விளக்கமறியலினை எதிர்வரும் 14 ஆம் திகதி வரை நீடித்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ரிஷாட்டின் வீட்டில் பணிபுரிந்த டகயமவைச் சேர்ந்த 16 வயதான ஹிஷாலினி தீக் காயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கு தொடா்பில் இன்று அவர் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் நீதிமன்றம் இவ்வாறு உத்தரவு பிறப்பித்துள்ளது.
குறித்த சம்பவம் தொடா்பில் 5 ஆவது சந்தேகநபராக ரிஷாட் பதியுதீன் பெயரிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.