185
வவுனியா – கோவில்குளம் பகுதியில், இளைஞர் குழு ஒன்று, வீதியால் செல்பவர்களை வழிமறித்து வாள் மற்றும் கோடரிகளால் தாக்கியதில், நால்வர் காயமடைந்துள்ளனர்.
மதுபோதையில் நின்றிருந்த குறித்த நபர்கள், வீதியால் செல்பவர்களை தாக்கியதுடன், வீடுகள் சிலவற்றுக்குள் புகுந்து உறங்கிக் கொண்டிருந்தவர்களையும் தாக்கியுள்ளனர்.
இதனால் பெண் உட்பட நால்வர் காயமடைந்த நிலையில், அவர்களில் இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Spread the love