Home இலங்கைதடுப்பு காவலில் இளைஞன் உயிரிழந்தமை – மனிதவுரிமை ஆணைக்குழு விசாரணை!

தடுப்பு காவலில் இளைஞன் உயிரிழந்தமை – மனிதவுரிமை ஆணைக்குழு விசாரணை!

by admin

மன்னார் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட இரு நபர்களில் சம்சுதீன் மொகமட் றம்சான் எனும் நபர் சுகவீனமுற்ற மன்னார் வைத்தியசாலையில் அனுமதித்தவேளை உயிரிழந்ததாக வெளியான செய்திகள் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் சொந்த பிரேரணை அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வட பிராந்திய இணைப்பாளர்,த. கனகராஜ் தெரிவித்துள்ளார். 
மேலும் தெரிவிக்கையில், 


கடந்த 01.10.2021 அன்று  இரு நபர்கள் கைது செய்யப்பட்டனர்.  கைதுடன் தொடர்புடைய விடயங்களை மன்னார் காவல் நிலைய தலைமை பொறுப்பதிகாரியிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. 


மேலும் பிரேத பரிசோதனை அறிக்கை பெறுவதற்கான வேண்டுகோள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், கைது செய்யப்பட்ட மற்றொரு நபரிடமிருந்து வாக்குமூலம் பெறுவதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன என தெரிவித்தார். 


குறித்த முறைப்பாடு 1996 ஆம் ஆண்டு 21 இலக்க இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு சட்டத்தின் பிரவு 14 இன் பிரகாரம் ஆணைக்குழுவின் சொந்த பிரேரணையாக பதிவுசெய்யப்பட்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More