Home இலங்கைகடமைக்கு, ஈபிடிபி உறுப்பினர் இடையூறு – வானத்தை நோக்கி, காவற்துறையினர் சூடு!

கடமைக்கு, ஈபிடிபி உறுப்பினர் இடையூறு – வானத்தை நோக்கி, காவற்துறையினர் சூடு!

by admin

வலி.கிழக்கு பிரதேச சபையில் ஈபிடிபி உறுப்பினர் கடமைக்கு இடையூறு விளைவித்ததால் காவற்துறையினர் வானத்தை நோக்கி சூடு நடத்தி எச்சரித்தனர். இந்தச் சம்பவம் ஊரெழு பகுதியில் இன்றிரவு 8 மணியளவில் இடம்பெற்றது.


“ஊரெழு பகுதியில் காவற்துறையினர் கடமையில் ஈடுபட்டிருந்தனர். மோட்டார் சைக்கிள் ஒன்றில் இருவர் தலைக்கவசமின்றி ஆபத்தான முறையில் பயணித்தனர் அவர்களை வழிமறித்து சாரதி அனுமதிப்பத்திரத்தை வாங்கி தண்டனைப் பத்திரம் எழுத முற்பட்ட போது அங்கு வந்த பிரதேச சபை உறுப்பினர் காவற்துறையினருடன் முரண்பட்டார்.


அவரது நடவடிக்கை எல்லை மீறிச் சென்றதனால் காவற்துறை உத்தியோகத்தர் வானத்தை நோக்கி இரண்டு தடவை சூடு நடத்தி எச்சரித்தார்” என காவற்துறையினர் தெரிவித்தனர்.
சம்பந்தப்பட்ட பிரதேச சபை உறுப்பினர் தன்னை ஈபிடிபி கட்சி என அறிமுகப்படுத்தி பல தடவைகள் காவற்துறையினருடன் முரண்பட்டு கடமைக்கு இடையூறு விளைவிப்பவர் என்றும் காவற்துறையினர் கூறினர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More