Home பிரதான செய்திகள்பிளே-ஒப் சுற்றுக்கு முன்னேறிய பெங்களூரு

பிளே-ஒப் சுற்றுக்கு முன்னேறிய பெங்களூரு

by admin

ஷார்ஜாவில் நேற்று மாலை நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட்டின் 48ஆவது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை ஆறு ஓட்ட வித்தியாசத்தில் வென்று ரோயல் சலஞ்சர்ஸ் பெங்களூரு அணி.பிளேஒப் சுற்று வாய்ப்பை உறுதி செய்துள்ளது

இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பெங்களூரு அணி நிா்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் ஏழு விக்கெட்டுகள் இழப்புக்கு 164 ஓட்டங்களை எடுத்தது. இதனைத் தொடா்ந்து 165 ஓட்டங்கள் எனும் வெற்றி இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 158 ஓட்டங்களை மாத்திரமே எடுத்தமையினால் பெங்களூரு அணி ஆறு ஓட்ட வித்தியாசத்தில் வெற்றி பெற்று பிளே-ஒப் சுற்றுக்கு முன்னேறியது.

அதேவேளை நேற்றையதிகம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற மற்றுமொரு போட்டியான 49ஆவது லீக் போட்டியில் ஹைதராபாத் அணியை ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது

மேலும் இன்று நடைபெறவுள்ள 50ஆவது லீக் போட்டியில் பிளேஒப் சுற்றில் ஏற்கெனவே தகுதி பெற்றுள்ள சென்னை – டெல்லி அணிகள் போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More