14ஆவது ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் இறுதிப் போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் டெல்லி அணியை நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.
லீக் சுற்றுகள் நிறைவடைந்த நிலையில், புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களைப் பிடித்த டெல்லி கப்பிடல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், பெங்களூருரோயல் சலஞ்சர்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் ‘பிளே-ஒப்’ சுற்றுக்கு முன்னேறின.
இதன்படி இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்று நேற்றையதினம் டெல்லி மற்றும் சென்னை அணிகளுக்கிடையில் நடைபெற்றது.
இதில் நாணயச்சுற்றில் வென்ற சென்னை அணி களத்தடுப்பினை தொிவு செய்த நிலையில் முதலில் துடுப்பெடுத்தாடிய டெல்லி அணி நிா்ணயிக்கப்பட்ட 20 ஓவா்களிள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 172 ஓட்டங்களை எடுத்தது.
இதையடுத்து 173 ஓட்டங்கள் எனும் வெற்றி இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி இறுதி ஓவரில் வெற்றிக்கு 13 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில், இரண்டு பந்துகள் எஞ்சியுள்ள நிலையில் அணித்தலைவா் தோனியின் சிறப்பான் ஆட்டதால் 173 ஓட்டங்களை எடுத்து நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இதேவேளை இன்று நடைபெறும் போட்டியில் பெங்களூரு ரோயல் சலஞ்சர்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் போட்டியிடவுள்ள நிலையில் இதில் தோல்வியடையும் அணி இந்தத் தொடரிலிருந்து வெளியேறுவதுடன் வெற்றிபெறும் அணி, டெல்லி அணியுடன் போட்டியிடும் இறுதிப்போட்டி 15ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது