இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தின் குஷிநகரில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும், இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவும் எதிர்வரும் புதன்கிழமை இருப்பர் என இந்தியாவின் நியூஸ் 18 இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் 24 பேர் கொண்ட உத்தியோகபூர்வ குழு ஒன்றும், 125 புத்த பிக்குகளும் இருப்பர் எனவும் குறிப்பிட்டுள்ளது. குஷிநகர் சர்வதேச விமான நிலையத்துக்கு கொழும்பிலிருந்து நேரடியாக ஜனாதிபதி கொட்டாபய ராஜபக்ஸ செல்லவுள்ள நிலையில், அன்றையதினமே பிரதமர் மோடியால் இவ்விமான நிலையம் திறந்து வைக்கப்படவுள்ளது.
அந்தவகையில், பிரதான பெளத்த புனித இடமொன்றான குஷிநகரில் முதலாவது சர்வதேச விமானமாக இலங்கை விமானம் தரையிறங்கவுள்ளது. குஷிநகருக்கு இலங்கையிலிருந்து உட்பட உயர் எண்ணிக்கையான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் ஒவ்வோர் ஆண்டும் செல்லுகின்றமை குறிப்பிடத்தக்கது