தென்கிழக்கு அரபி கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மையம் காரணமாக கடந்த 2 நாட்களாக கேரளா முழுவதும் பலத்த மழையினால் 18 போ் உயிாிழந்துள்ளதுடன் 22 போ் மண்ணில் புதைந்து காணாமல் போயுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது
கேரளாவில் நேற்று பெய்த மழை, கடந்த 2018 மற்றும் 2019-ம் ஆண்டு ஏற்பட்ட பெருமழை வெள்ளத்தை நினைவு படுத்தியதாக கேரள மக்கள் அச்சத்துடன் தெரிவித்துள்ளனர். பலத்த மழை காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையடி வாரத்தில் அமைந்துள்ள இடுக்கியில் நிலச்சரிவு ஏற்பட்டதில் 22 பேரை காணவில்லை என தொிவிக்கப்பட்டுள்ளது.
. அங்கு கடற்படை மற்றும் ராணுவத்தினர் மண்ணில் புதைந்தவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ள போதிலும் மழை தொடர்ந்து பெய்து வருவதால் மீட்பு பணியில் சிரமங்கள் ஏற்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது
மேலும் நிலச்சரிவு மற்றும் மழைக்கு கோட்டயம் மற்றும் இடுக்கியில் 2 பெண்களும், ஒரு குழந்தையும் இறந்துள்ளனா் எனவும் இது போல தொடுபுழா அருகே அரக்குளம் ஆற்றுப்பாலத்தில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளத்தில் சிக்கிய கார், அடித்துச் செல்லப்பட்டதில் அதிலிருந்த 2போ் உயிாிழந்துள்ளமதாகவும் மொத்தமாக இதுவரை 18 பேர் பலியாகி உள்ளதாகவும் தொிவிக்கப்பட்டுள்ளது . இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
மோசமான வானிலை காரணமாக மீட்புக்குழுவினா் அந்த பகுதிகளுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்ட நிலையில் இன்று காலையில் மழை சற்று குறைந்ததும் பேரிடர் மீட்பு குழுவினர் அங்குச் சென்று நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்டு நிவாரண முகாம்களில் தங்க வைத்துள்ளனர்.
கேரளாவில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளதையடுத்து கோட்டயம், பத்தனம்திட்டா, திருச்சூர், இடுக்கி, எர்ணாகுளம், பாலக்காடு ஆகிய 6 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சிாிக்கை விடப்பட்டுள்ளது.
இது போல இடுக்கி, மலம் புழா உள்பட மாநிலத்தில் உள்ள அனைத்து அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளதால், உபரிநீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.