தற்போதைய அரசாங்கம் உருவானதன் பின்னர் மிகவும் நம்பிக்கையுடன் பொது இடங்களில் சுவர் ஓவியங்களை வரைந்து அன்று தம்மை வெளிப்படுத்திய இளைஞர்கள், வெளிநாடு செல்வதற்காக கடவுச்சீட்டு பெற இன்று வரிசையில் நிற்கின்றனர் என்றும், அத்தகைய இளைஞர்களை வெற்றிகொள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எதிர்காலத்தில் ஒரு வரலாற்று பாத்திரத்தை வகிக்க வேண்டும் என்றும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஐந்தாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றிங அவர்,
அனைத்து முரண்பாடுகளுக்கும் எதிராக கவனமான போராட்டத்தின் பின்னரே பொதுஜன பெரமுன ஆட்சியை வென்றது என்ற அவர், ஆட்சியை நடத்துவதுடன் கட்சியும் மக்களை வைத்து அரசியல் செய்ய வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேவேளை கடினமான காலங்களில் தமக்கு ஆதரவாக நின்று பொதுவான நோக்கத்திற்காக உழைத்த சிறு கூட்டாளிகளை கட்சியால் அந்நியப்படுத்த முடியாது என்றும் வலியுறுத்தி உள்ளார்..