இருபதுக்கு20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியை வென்று அவுஸ்திரேலிய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
நாணய சுழற்சியை வென்ற அவுஸ்திரேலிய அணி முதலில் களத்தடுப்பை தொிவு செய்தநிலையில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி நிா்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்களை இழந்து 176 ஓட்டங்களை எடுத்தது.
இதனையடுத்து 177 ஓட்டங்கள் எனும் வெற்றியிலக்குடன் களமிறங்கிய அவுஸ்திரேலிய அணி 19 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்களை இழந்து 177 ஓட்டங்களை எடுத்து வெற்றி பெற்றுள்ளது.
இந்தநிலையில் எதிா்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில் அவுஸ்திரேலிய அணி நியுஸிலாந்து அணியுடன் போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது