182
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகமின் அனுமதியின்றி ஐக்கிய மக்கள் சக்தியினர் ஏற்பாடு செய்துள்ள ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்க சில நீதிமன்றங்கள் தடை உத்தரவு பிறப்பித்துள்ளன. சில நீதிமன்றங்கள் தடை உத்தரவு பிறப்பிக்க மறுத்துள்ளன.
அதனடிப்படையில் புதுக்கடை 5 ஆம் இலக்கம், மஹர 1 ஆம் மற்றும் 2 ஆம் இலக்கங்கள், கடுவலை மற்றும் மஹரகம் ஆகிய நீதிமன்றங்களினால் இவ்வாறு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை குறித்த ஆர்ப்பாட்டத்திற்கு தடை உத்தரவு கோரி பொலிஸார் தாக்கல் செய்த மனுவை மாளிகாகந்த, கங்கொடவில மற்றும் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றங்கள் நிராகரித்துள்ளன.
Spread the love