Home இலங்கைநடைமுறைக்கு வந்த இரு சட்டமூலங்கள் :

நடைமுறைக்கு வந்த இரு சட்டமூலங்கள் :

by admin

தொழிலாளர்களின் குறைந்தபட்ச ஓய்வுபெறும் வயதெல்லை மற்றும் தொழிலாளர்களின் வேலையை முடிவுறுத்தல் (சிறப்பேற்பாடுகள்) (திருத்தம்) ஆகிய இரு சட்டமூலங்களையும் சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்த்தன நேற்று (17) சான்றுரைப்படுத்தியுள்ளாா்.

இந்த இரு சட்டமூலங்களும் கடந்த 11ஆம் திகதி நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டிருந்தன.

தனியார் துறை தொழிலாளர்களின் ஓய்வுபெறும் வயதை 60 வயது வரை அதிகரிப்பது இந்தச் சட்டமூலங்களின் நோக்கமாகும். இதுவரை தனியார் துறையில் பணியாற்றும் பல்வேறு ஊழியர்களின் ஓய்வுபெறும் குறைந்தபட்ச வயது நிர்ணயிக்கப்பட்டிருக்கவில்லை. பெரும்பாலும் தனியார்துறை ஊழியர்கள் ஓய்வுபெறுவது ஊழியர்களுக்கும் தொழில்வழங்குனருக்கும் இடையிலான ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளை அடிப்படையாக கொண்டே நிா்ணயிக்கப்படும்.

இதற்கமைய, 2021ஆம் ஆண்டு 28 ஆம் இலக்க ´தொழிலாளர்களின் குறைந்தபட்ச ஓய்வுபெறும் வயது´ மற்றும் 2021ஆம் ஆண்டு 29ஆம் இலக்க ´தொழிலாளர்களின் வேலையை முடிவுறுத்தல் (சிறப்பேற்பாடுகள்) (திருத்தம்)´ ஆகிய இரு சட்டங்களும் நேற்று (17) முதல் நடைமுறைக்கு வருகின்றன.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More