அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதன் பிரகாரம், அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்களின் எண்ணிக்கை இருக்கவில்லையெனக் கூறி, உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் 2 பேரும், 4 இராஜாங்க அமைச்சர்களும் அதிகமாக நியமிக்கப்பட்டுள்ளமையால், அரசியலமைப்பு மீறப்பட்டுள்ளதாக உத்தரவிடக் கோரி
பொறியியலாளர் கபில ரேணுக பெரேரா, உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்துள்ளார்.
அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்திற்கு அமைய, அமைச்சரவை அமைச்சர்கள் 30 பேரும் மற்றும் 40 இராஜாங்க அமைச்சர்களை நியமிக்க முடியும் என வரையறை
செய்யப்பட்டுள்ளது.
அதற்கமைய, செயற்படாத ஜனாதிபதி, அரசியலமைப்பினூடாக அமைய செயற்படத் தவறியுள்ளதாக உத்தரவிடக் கோரி சட்டத்தரணி தர்ஷன வேரதுவவினூடாக மனுத் தாக்கல்
செய்யப்பட்டுள்ளது.
நாட்டின் அரசியலமைப்பை பாதுகாத்து அதனை வலுப்படுத்த வேண்டியதன் பொறுப்பு, ஜனாதிபதியின் பிரதான கடமை எனவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது அவர் தனது மனுவில், சட்ட மா அதிபர், பிரதமர் தலைமையிலான அமைச்சரவை, இராஜாங்க அமைச்சர்கள், ஜனாதிபதி செயலாளர்
பி.பீ ஜயசுந்தர, நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல உள்ளிட்ட 82 பேரை பிரதிவாதிகளாக குறிப்பிட்டுள்ளார். தற்போதைய நிதி அமைச்சரால் பாராளுமன்றத்திற்கு
சமர்ப்பிக்கப்பட்டுள்ள 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில், அரசாங்கத்தின் வருடாந்த செலவு 525 பில்லியனை விட அதிகமாக காணப்படுவதாகவும் மனுதாரர் தனது மனுவில் தெரிவித்துள்ளார்.