அம்பாறை மாவட்டத்தின் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட நற்பிட்டிமுனை கிட்டங்கி பிரதான வீதியில் செல்லும் குடிநீர் குழாய் உடைந்து கடந்த ஒரு மாத காலமாக குடிநீர் விரையமாகிச் செல்கின்றது.எனினும் இவ்விடயம் குறித்து எவ்வித நடவடிக்கையும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை என பொதுமக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
மேலும் கல்முனை பிராந்திய குடிநீர் வடிகால் அலுவலகம் காணப்படுகின்றதுடன் பிராந்திய அலுவலகத்தில் சேவையாற்றும் பல்வேறு அதிகாரிகள் பிரதான வீதியில் விரயமாகி ஓடிக்கொண்டிருக்கும் குடிநீரினை கண்டும் காணாதது போல் செல்கின்றனர். இவ்வாறு விரையமாகிச் செல்லும் குடிநீர் வீதியின் நெடுகிலும் ஓடிச் செல்வதால் பிரதான வீதியில் பயணிப்போர் அசௌகரியங்களை எதிர்நோக்குகின்றனர்.
எனவே இவ்வாறு குடிநீர் விரயமாவதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.