231
யாழ்ப்பாணம் நெடுந்தீவு கடற்கரையிலும் அடையாளம் தெரியாத நபரின் சடலம் ஒன்று கரையொதுங்கியுள்ளது. நெடுந்தீவு கடற்கரையில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை காலை குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. சடலத்தை அடையாளம் காணும் முயற்சியிலும் மேலதிக நடவடிக்கைகளிலும் நெடுந்தீவு காவல்துறையினா் ஈடுபட்டுள்ளனர்.
இதேவேளை நேற்றைய தினம் சனிக்கிழமை வடமராட்சி மணற்காடு மற்றும் வல்வெட்டித்துறை கடற்கரை பகுதிகளிலும் இரு சடலங்கள் கரையொதுங்கி இருந்தன. இரு தினங்களில் மூன்று சடலங்கள் யாழ்.மாவட்ட கரையோரங்களில் மீட்கப்பட்டுள்ளன.
Spread the love