இலங்கை பிரதான செய்திகள்

யாழில் ஏ.ரி.எம்.ல 6 இலட்ச ரூபாயை கொள்ளையிட்ட இருவரை தேடும் காவல்துறையினா்

தனிநபர் ஒருவரின் தானியங்கி பணக் கொடுக்கல் வாங்கல் அட்டையை எடுத்து சுமார் 6 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையிட்ட இருவரை யாழ்ப்பாணம் காவல்துறையினா் தேடுகின்றனர்.

அவர்கள் இருவரது ஒளிப்படங்களை வெளியிட்டுள்ள காவல்துறையினா் சந்தேக நபர்கள் தொடர்பில் தகவல் வழங்குமாறு பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

உரும்பிராயின் தனிநபர் ஒருவரின் வங்கிக் கணக்கின் தானியங்கி பணப்பரிமாற்றல் அட்டை காணாமற்போனமை தொடர்பில் அவர் அறிந்திருந்த நிலையில் வங்கிக் கணக்கிலிருந்து சுமார் 6 லட்சம் ரூபாய் நிதி மீளப்பெறப்பட்டுள்ளது.

அதனை அடுத்து வங்கி நாடியதுடன் யாழ்ப்பாணம் காவல் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றையும் வழங்கினார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் வங்கியின் உதவியுடன் வங்கி அட்டையைப் பயன்படுத்தி பணத்தை மீளப்பெற்ற இருவர் தொடர்பான ஒளிப்படங்களை காவல்துறையினா் பெற்றுக்கொண்டனர்.

சம்பவம் இடம்பெற்று சில மாதங்கள் கடந்துள்ள நிலையில் சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்படாத நிலையில் பொதுமக்களின் உதவியைக் கோருவதாக யாழ்ப்பாணம் தலைமையகப் காவல் நிலைய பொறுப்பதிகாரி தலைமை காவல்துறையினா் பரிசோதகர் பழிகக்கார கேட்டுள்ளார்.

குறித்த நபர்கள் தொடர்பான தகவல்களை ஏதாவது தெரிந்தால் யாழ்ப்பாணம் தலைமையக காவல் நிலைய பொறுப்பதிகாரியின் 0718591329 என்ற அலைபேசிக்குத் தொடர்பு கொண்டு தகவல்களை வழங்குமாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.