163
கொழும்பு பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவின் அறிவுறுத்தலுக்கு அமைவாக வவுனியா பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினரால் தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரனிடம் மன்னாரில் உள்ள அவரது அலுவலகத்தில் வைத்து இன்று செவ்வாய்க்கிழமை (7) விசாரணைக்கு உற்படுத்தியுள்ளதாக தெரிய வருகிறது.
கடந்த கால சிவில் சமூக செயற்பாடுகள் , நடாத்தப்பட்ட நிகழ்வுகள் தொடர்பாகவும் குறிப்பாக மாவீரர் தின நிகழ்வுகள் சம்பந்தமாகவும் பல்வேறு கோணத்தில் கேள்விகள் தொடுத்து சுமார் இரண்டரை மணி நேரம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக அவர் தெரிவித்தார்.
Spread the love