பிரதேச சபை பெண்களை வலுவுட்டல் பிரதான நோக்காக கொண்ட கற்றல் மற்றும் தலைமைத்துவத்தில் பெண்கள் எனும் நிகழ்ச்சித் திட்டத்தின் பிரதேச சபை பெண்களுக்காக “தேவை மதிப்பீடு மற்றும் வளங்களைக் கண்டறிதல் அதற்கமைவான வளவரைபடம் தயாரித்தல்” பற்றியும் சமூகப் புள்ளியிடல் அட்டை பற்றிய பயிற்சி செயலமர்வும் இன்று யாழிலுள்ள தனியார் விருந்தினர் விடுதியொன்றில் நடைபெற்றது.
சேர்ச் போர் கொமன் கிரவுண்ட் நிறுவனம் ,உள்ளுராட்சி மன்றங்களின் சம்மேளனம் மற்றும் மகளிர் அபிவிருத்தி நிலையத்தின் ஏற்பாட்டில் ஒழுங்கு செய்யப்பட்ட இந் நிகழ்வில் யாழ் மாவட்ட உள்ளுராட்சி மன்றப் பெண்களுக்கு இதுவரை வளங்களை கண்டறிதல் தொடர்பாக அளிக்கப்பட்ட தொடர் பயிற்சிகளுக்கான முடிவில் திட்ட முன்மொழிவுகளை தயாரித்தல் பற்றிய தெளிவுட்டல்களும் வழங்கப்பட்டன.
இதில் குறித்த சமூகப் பிரதிநிதிகள் மற்றும் உள்ளுராட்சி மன்றப் பெண்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்