223
யாழ். அச்சுவேலி மேற்கில் வர்த்தக நிலையம் உடைக்கப்பட்டு 10 மூடை குத்தரிசி களவாடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பிரதான வீதியில், அச்சுவேலி மேற்கில் உள்ள தனியார் கல்வி நிலையம் ஒன்றின் அருகில் உள்ள வர்த்தக நிலையத்திலேயே நேற்று முன்தினம் இந்த திருட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பில் அச்சுவேலி காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், முறைப்பாட்டின் பிரகாரம் காவல்துறையினா்விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Spread the love