197
சர்ச்சைக்குரிய சீன உரக் கப்பலுக்கு சொந்தமான நிறுவனத்திற்கு 6.9 மில்லியன் அமெரிக்க டொலர்களை இன்று வழங்க மக்கள் வங்கி தீர்மானித்துள்ளது.
கொழும்பு வணிக மேல் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்ட தடை உத்தரவு நீக்கப்பட்டதன் காரணமாக, குறித்த தொகையை கப்பலுக்கு சொந்தமான நிறுவனத்திற்கு செலுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டதாக மக்கள் வங்கி தெரிவித்துள்ளது.
உரக்கப்பல் இலங்கையினால் ஏற்றுக் கொள்ப்படாத போதும் தரமான உரத்தை மீள வழங்குவதற்கு இரு தரப்பினருக்கும் இடையில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டது. இதன்படி இந்த நிறுவனத்திற்கு மக்கள் வங்கியின் ஊடாக பணம் செலுத்தப்பட உள்ளது.
Spread the love