189
மட்டக்களப்பு – கல்குடா, கும்புறுமூலை கயுவத்தை கடலில் நேற்றையதினம் (14) நீராடிய ஏழு சிறுவர்களில் இருவர் கடலில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக காவல்துறையினா் தொிவித்துள்ளனா். மட்டக்களப்பு – கிரான் பகுதியைச் சேர்ந்த ஜீவானந்தா சுஜினன் (வயது 16), ச.அஸ்வன் (வயது 16) ஆகிய இரு சிறுவர்களே இவ்வாறு கடலில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஒரு சிறுவன் காப்பாற்றப்பட்டு வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் காணாமல் போன சிறுவர்களை தேடும் பணிகள் இடம்பெற்று வருவதுடன், மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை காவல்துறையினா் மேற்கொண்டு வருகின்றனர்.
Spread the love