Home இலங்கைகாணாமல் போன மீனவா்கள் கண்டுபிடிக்கப்பட்டனா்

காணாமல் போன மீனவா்கள் கண்டுபிடிக்கப்பட்டனா்

by admin

வல்வெட்டித்துறையில் இருந்து கடற்தொழிலுக்கு சென்று காணாமல் போயிருந்த மீனவர்கள் இருவரும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வல்வெட்டித்துறை பகுதியை சேர்ந்த சுந்தரலிங்கம் கெங்காதரன் (வயது 37) மற்றும் தவராசா சுதர்சன் (வயது 41) ஆகிய இரு மீனவர்களுமே இவ்வாறு காணாமல் போயிருந்தனர். 

வல்வெட்டித்துறையில் இருந்து நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை காலை தொழிலுக்கு சென்ற மீனவர்களில் 40 குதிரை வலு கொண்ட படகில் சென்ற இரு மீனவர்கள் கரை திரும்பவில்லை. 
காணாமல் போன இரு மீனவர்களையும் தேடும் பணிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் இருவரும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பருத்தித்துறை சுப்பர்மடம் பகுதி மீனவர்கள் கரையில் உள்ளவர்களுக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

அவர்களின் தகவலின் அடிப்படையில், குறித்த மீனவர்கள் நிலைகொண்டுள்ள கடலின் தொலைவின் அடிப்படையில் அவர்கள் இருவரும் கரை திரும்ப எட்டு மணிநேரம் ஆகலாம் எனத் தொிவிக்கப்பட்டுள்ளது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More