பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு நட்டஈடு வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி, 2021 – 2022 ஆண்டுகளில் நெல் பெரும்போக அறுவடையில் வீழ்ச்சி ஏற்பட்டால், அதனால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு நட்டஈடு வழங்குவதற்காக 40,000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, இன்று முதல் நெல் சந்தைப்படுத்தல் அதிகார சபை ஊடாக ஒரு கிலோ நெல் தலா 75 ரூபாய்க்கு கொள்வனவு செய்யப்படும் எனவும் விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் பாதிக்கப்பட்ட, பாதிக்கப்படும் விவசாயிகளுக்கும் இந்த நட்டஈட்டுத் தொகை கிடைக்குமா என அம்மாகாண விவசாயிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.