Home உலகம் கனடாவில் பாரஊர்தி ஓட்டுநர்களின் போராட்டத்தால் நெருக்கடி நிலை!

கனடாவில் பாரஊர்தி ஓட்டுநர்களின் போராட்டத்தால் நெருக்கடி நிலை!

by admin

பாரஊர்தி ஓட்டுநர்களுக்கு தடுப்பூசி கட்டாயம் என்றும், தடுப்பூசி போடாதவர்கள் ஒரு வாரம் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்றும் கனேடிய அரசாங்கம் உத்தரவிட்டதற்கு எதிராக பாரஊர்தி ஓட்டுநர்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருவதனால் கனடாவில் நெருக்கடி நிலை தோன்றியுள்ளது.

கொரோனா தொற்று பரவாமல் தடுக்க கனடாவில் அரசு கொரோனா கட்டுப்பாடுகளை கடுமையாக்கியுள்ளது. பொது இடங்களில் நடமாடுவோர், பொதுப் போக்குவரத்தில் பயணிப்போருக்கு தடுப்பூசி சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் இருந்து கனடாவுக்குள் பிரவேசிப்போருக்கு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பாரஊர்தி ஓட்டுநர்களுக்கு தடுப்பூசி கட்டாயம் என்றும், தடுப்பூசி போடாதவர்கள் ஒரு வாரம் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்றும் அரசு உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பாரஊர்தி ஓட்டுநர்கள், தலைநகர் ஒட்டாவாவில் உள்ள முக்கிய சாலைகளில் பாரஊர்திகளை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் சாலைகளில் கிரிக்கெட், ஹொக்கி விளையாட்டுகளும் விளையாடுகின்றனர். இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

ஒருவாரத்திற்கும் மேலாக நீடித்த போராட்டம் தற்போது தீவிரமடைந்துள்ளது. ஒட்டாவில் தொடங்கியுள்ள இந்த போராட்டம் அருகே உள்ள நகரங்களுக்கும் பரவ வாய்ப்புள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து ஓட்டாவா மேயர் கூறுகையில், இந்த போராட்டம் வருத்தம் அளிக்கிறது. இது ஜனநாயகத்துக்கு சவலானது. தலைநகரில் உள்ள காவற்துறையினரை விட போராட்டத்தில் ஈடுபடு பவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அவர்களை கட்டுப்படுத்துவது சிரமமாக உள்ளது. இந்த போராட்டத்திற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையே பாரஊர்தி ஓட்டுநர்கள் போராட்டம் காரணமாக கனடாவில் அவசர நிலை பிரகனப்படுத்தப்பட்டுள்ளது.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More