தீவிரமான டெங்கு காய்ச்சல் அபாயம் உள்ள மாவட்டங்களின் பட்டியலில் யாழ்.மாவட்டமும் அபாய வலயமாக அறிவிக்கப்பட்டுள்ளது. என யாழ்.மாவட்டச் செயலர் க.மகேஸன் கூறியுள்ளார்.
இது குறித்து ஊடகங்களுக்கு மேலும் அவர் கூறியுள்ளதாவது, யாழ்.மாவட்டத்தைப் பொறுத்தவரையில் சமகாலத்தில் டெங்கு காய்ச்சல் அதிகமாகவே காணப்படுகின்றது.
எனவே பொதுச் சுகாதார பரிசோதகர்கள், கிராம உத்தியோகத்தர்கள், ஏனையோருடன் இணைந்து டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளில் ஒன்றிணைந்து செயற்படுமாறு கேட்டுள்ளோம்.
எமது மாவட்டத்தில் மலோரியா அபாயம் இருந்தபோதும் தற்போது அது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
பொது மக்கள் மிகவும் அவதானமாக செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள் என்றார். இதேவேளை நாடு முழுவதும் 6 மாவட்டங்கள் அபாய வலயங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவற்றில் யாழ்.மாவட்டமும் அடங்கியுள்ளதாக மாவட்டச் செயலர் கூறியுள்ளார்.