யாழில் புகையிரதம் மோதி இளம் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். ராஜ்குமார் ஜெயந்தினி (வயது 23) எனும் பெண்ணே உயிரிழந்துள்ளார். கொக்குவில் தொழிநுட்ப கல்லூரிக்கு அருகில் உள்ள பாதுகாப்பற்ற புகையிரத கடவையை கடக்க முற்பட்ட போதே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.