Home இலங்கைவடக்கு ஆளுநருக்கு எதிராக வேலணை பிரதேச சபையில் கண்டன தீர்மானம்!

வடக்கு ஆளுநருக்கு எதிராக வேலணை பிரதேச சபையில் கண்டன தீர்மானம்!

by admin

யாழ். தீவகப் பெண்கள் தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்துள்ள கருத்து மிகுந்த மன வேதனையை தந்துள்ளது என சுட்டிக்காட்டி வேலணை பிரதேச சபையில் கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

வேலணை பிரதேச சபையின் மாதாந்த அமர்வு இன்றையதினம் தவிசாளர் கருணகரகுருமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. அதன் போது, பிரதேச சபை உறுப்பினர் மேரி மரில்டா ஆளுநர் தெரிவித்ததாக வெளியான செய்தியை சுட்டிக்காட்டி  கண்டன தீர்மானம் ஒன்றை கொண்டுவந்திருந்தார்.  

அதனை சபையின் அனைத்து உறுப்பினர்களாலும் ஆளுநரது குறித்த விடயம் கண்டிக்கப்பட்டதுடன் அதற்கு அவர் மன்னிப்பு தெரிவித்து செய்தி வெளியிட வேண்டும் என்ற தீர்மானத்தையும் ஏகமனதாக நிறைவேற்றி அதை அளுநருக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்குமாறும் தீர்மானித்திருந்தனர்.


கடந்த சில தினங்களுக்கு முன்னர் , யாழ். தீவகப் பகுதிகளில் சில இடங்களில் பெண்கள் சமூகத்துக்கு விரோதமான நடத்தைகளுக்குத் தள்ளப்படுவது மிகவும் வருத்தமளிக்கும் நிலையில், அவ்வாறான பெண்களுக்கு உதவுவதற்குத் தயாராக இருப்பதாக வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்ததாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி இருந்தன. குறித்த செய்திக்கு எதிராகவே பிரதேச சபையில் கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More