Home இலங்கைநெல்லியடி விபத்தில் இளைஞன் உயிரிழப்பு

நெல்லியடி விபத்தில் இளைஞன் உயிரிழப்பு

by admin

நெல்லியடியில் ஹன்டர் வாகனமும் மோட்டார் சைக்கிளும் மோதுண்டு ஏற்பட்ட விபத்தில் இளைஞர் ஒருவர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். வடமராட்சி மத்திய மகளிர் கல்லூரிக்கு முன்பாக இன்று பிற்பகல் 12.55 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றது.

சம்பவத்தில் துன்னாலை கோவில் சந்தை பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞனே உயிரிழந்தார்.

ஹன்டர் வாகனம் வீதியில் பயணித்த வேளை, எதிரே மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன், தனது கட்டுப்பாட்டையிழந்து வீதியின் மறுபக்கத்தில் பயணித்த வாகனத்துடன் மோதி விபத்து ஏற்பட்டதாக ஆரம்ப விசாரணைகளில் காவல்துறையினா் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் நெல்லியடி காவல்துறையினா் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More