152
மாவிட்டபுரம் பகுதியில் இடம்பெற்ற புகையிரத விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மாவிட்டபுரம் பகுதியில் இன்றைய தினம் சனிக்கிழமை இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் பண்டத்தரிப்பு சாந்தை பகுதியை சேர்ந்த சதாசிவம் சசிக்குமார் (வயது 46) என்பவரே உயிரிழந்துள்ளார்.
காங்கேசன்துறையில் இருந்து , கொழும்பு நோக்கி சென்ற புகையிரதம் மோதியே விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் காங்கேசன்துறை காவல்துறையினா் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Spread the love