கடவத்தை 9 ஆம் கட்டை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது. நேற்று (24) இரவு மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த இருவரே இவ்வாறு இனந்தெரியாதோரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினா் தெரிவித்துள்ளனர்.
பேலியகொட பகுதியைச் சேர்ந்த இருவரே உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக தொிவித்துள்ள கடவத்தை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.