Home இலங்கைஉரும்பிராயில் காவல்துறையினா் மீது தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் இரு பெண்கள் உள்ளிட்ட ஐவர் கைது

உரும்பிராயில் காவல்துறையினா் மீது தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் இரு பெண்கள் உள்ளிட்ட ஐவர் கைது

by admin

நீதிமன்ற பிடிவிறாந்தை நடைமுறைப்படுத்த சென்ற இரு காவல்துறை உத்தியோகஸ்தர்கள் மீது தாக்குதல் மேற்கொண்ட குற்றத்தில் 2 பெண்கள் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 
கோப்பாய் காவல்துறைப்பிரிவுக்கு உட்பட்ட யோகபுரம் பகுதியை சேர்ந்த இரு இளைஞர்கள் நீதிமன்ற வழக்கு விசாரணைக்கு செல்லாததால் நீதிமன்றினால் அவர்களுக்கு எதிராக பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டது. 


நீதிமன்றினால் பிறப்பிக்கப்பட்ட பிடிவிறாந்தினை நடைமுறைப்படுத்தி அவர்களை கைது செய்வதற்காக இரண்டு காவல்துறை உத்தியோகஸ்தர்கள் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை யோகபுரம் பகுதிக்கு சென்று இருந்தனர். 


அதன் போது அங்கு நின்றவர்கள் காவல்துறையினரின் கடமைக்கு இடையூறு விளைவித்ததுடன் , காவல்துறையினர் மீது தாக்குதலையும் மேற்கொண்டு இருந்தனர். சம்பவம் தொடர்பில் மேலதிக நடவடிக்கையை முன்னெடுத்த காவல்துறையினா், காவல்துறையினரின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை , தாக்குதல் மேற்கொண்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் இரு பெண்கள் உள்ளிட்ட ஐவரை கைது செய்துள்ளனர். 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More