154
மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் பதவிவிலகுவதாக அறிவித்துள்ளார். முன்னதாக இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர பதவிவிலகத் தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ளார். தனது டுவிட்டர் கணக்கில் இதனை பதிவிட்டுள்ள அவர் தனது பதவிவிலகல் கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
முன்னதாக இராஜாங்க அமைச்சர் பதவியிலிருந்து விலகத் தீர்மானித்துள்ளதாக தயாசிறி ஜயசேகர ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்திருந்தாா்.
நேற்றையதினம் அமைச்சர் நாமல் ராஜபக்ஸ பதவி விலகியிருந்ததனையடுத்து நீதியமைச்சர் அலி சப்ரியும் பதவிவிலகியிருந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது
Spread the love