Home இலங்கைநாடாளுமன்றில் இன்று – 41 பேர் தனிவழி போவதாக அறிவிப்பு!

நாடாளுமன்றில் இன்று – 41 பேர் தனிவழி போவதாக அறிவிப்பு!

by admin

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 14 உறுப்பினர்களும் சுயமாக செயற்படுவார்களாம்!

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 14 உறுப்பினர்களும் சுயேற்சையாக செயற்படவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

10 கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் 16 உறுப்பினர்களும் சுயமாகப் போகிறார்கள்!


10 கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் 16 உறுப்பினர்களும் நாடாளுமன்றத்தில் சுயேட்சையாக செயற்படுவதாக முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அதன்படி, சுயேட்சை செயற்பட தீர்மானித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் வருமாறு,

  1. விமல் வீரவன்ச
  2. உதய பிரபாத் கம்மன்பில
  3. வாசுதேவ நாணயக்கார
  4. திஸ்ஸ விதாரண
  5. டிரான் அலஸ்
  6. வண.அத்துரலியே ரத்தன தேரர்
  7. கெவிந்து குமாரதுங்க
  8. வீரசுமண வீரசிங்க
  9. அசங்க நவரத்ன
  10. மொஹமட் முஸம்மில்
  11. நிமல் பியதிஸ்ஸ
  12. காமினி வலேகொட
  13. ஏ. எல். ஏ அதாவுல்லா
  14. 14. கயாஷான்
  15. ஜயந்த சமரவீர
  16. உத்திக பிரேமரத்ன

    SLPP உறுப்பினர்கள் 12 பேர் சுயேட்சையாக செயற்பட முடிவு
    ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் 12 உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் சுயேட்சையாக செயற்பட தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் அனுர பிரியதர்ஷன யாப்ப தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அதன்படி, சுயேட்சை செயற்பட தீர்மானித்துள்ள நாடாளுளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் வருமாறு,

  1. அனுர பிரியதர்ஷன யாப்பா
  2. ஜோன் செனவிரத்ன
  3. சுசில் பிரேமஜயந்த
  4. சந்திம வீரக்கொடி
  5. நளின் பெர்னாண்டோ
  6. நிமல் லான்சா
  7. சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே
  8. பிரியங்கர ஜயரத்ன
  9. ரொஷான் ரணசிங்க
  10. அருந்திகா பெர்னாண்டோ
  11. ஜயரத்ன ஹேரத்
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More