அரசாங்கம் – எதிர்க்கட்சியினர் உள்ளிட்ட பல தரப்பினரால் முன்மொழியப்பட்டுள்ள இடைக்கால அரசாங்கத்தின் பிரதமர் பதவிக்கு ஐந்து பேரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ரணில் விக்ரமசிங்க, நிமல் சிறிபால டி சில்வா, பாட்டலி சம்பிக்க ரணவக்க, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா – டலஸ் அழகப்பெரும ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், ஐரோப்பிய இராஜதந்திரிகள் பலரை சந்தித்து, தற்போது நிலவும் பொருளாதார நிலைமை குறித்து, ரணில் விக்ரமசிங்க விளக்கமளித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. இதன்போது இடைக்கால அரசாங்கத்தின் தேவை – அதன் பதவிக்காலம் குறித்தும் கலந்துரையாடப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதன் அடிப்படையில் 10 உறுப்பினர்களுக்கு மிகையாகாமல், சிரேஷ்ட மற்றும் இளம் நாடாளுமன்ற உறுப்பினர்களை உள்ளடக்கிய புதிய அரசாங்கத்தை உருவாக்கும் யோசனை குறித்தும் ரணில் விக்ரமசிங்க கலந்துரையாடியுள்ளதாக கூறப்படுக்றிது.