
சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்ட முதிரை மரக்குற்றிகள் கைதடியில் யாழ்ப்பாணம் காவல்துறை புலனாய்வு பிரிவினரால் மீட்கப்பட்டுள்ளன. யாழ்.மாவட்ட சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சருக்கு கீழ் இயங்கும் யாழ் மாவட்ட காவல்துறை புலனாய்வு பிரவுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் கைதடி பகுதியில் சந்தேகத்துக்கிடமான வாகனத்தை சோதனை செய்த பொழுது அனுமதிப்பத்திரம் இல்லாத சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்ட 4 இலட்சம் ரூபா பெறுமதி வாய்ந்த 8 முதிரை மர குற்றிகள் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதோடு மானிப்பாய் பகுதியை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் மற்றும் கைப்பற்றப்பட்ட வாகனம்,மரக்குற்றிகளை நீதிமன்றத்தில் முற்படுத்தும் நடவடிக்கையினை காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர்



Spread the love
Add Comment