மன்னாரில் இருந்து சட்டவிரோதமாக இந்தியாவிற்கு படகில் கை குழந்தையுடன் சென்ற இளம் குடும்பம் உட்பட 12 பேரை தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து இன்று சனிக்கிழமை (4) அதிகாலை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
மன்னார் மடு தேக்கம் பகுதியை சேர்ந்த பத்து மாத கைக்குழந்தையுடன் இளம் குடும்பம் ஒன்றும் பேசாலை பகுதியை சேர்ந்த 7 நபர்கள் தலைமன்னார் கடற்பரப்பில் வைத்தும், யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரு பெண்கள் சட்டவிரோதமாக படகில் இலங்கைக்கு சொந்தமான தீடை பகுதியில் இறக்கி விடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட 12 பேரும் இன்று சனிக்கிழமை (08) மன்னார் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப் பட்டு மேலதிக விசாரணைகளின் பின்னர் மன்னார் நீதவான் நீதிமன்ற நீதிபதி A.H.ஹைபதுல்லா முன்னிலையில் மதியம் 3 மணியளவில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
வழக்கை விசாரித்த நீதவான் நீதிமன்ற நீதிபதி இரு சிறுவர்களையும் பொற்றோரிடம் ஒப்படைக்குமாறு ஏனைய 10 பேரையும் சுமார் ஐம்பதாயிரம் ரூபா சரீர பிணையில் செல்ல அனுமதித்துள்ளார்.