167
யாழ்ப்பாணம் வல்வெட்டி துறையிலிருந்து முள்ளிவாய்க்கால் வரையிலான மக்கள் பேரணி இன்றைய தினம் திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இன விடுதலை தேடி முள்ளிவாய்க்கால் நோக்கிய பயணம் என்ற கருப்பொருளில் இந்த பேரணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
வல்வெட்டி துறை ஆலடியிலுள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் இல்லத்திலிருந்து இந்த பேரணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் வல்வெட்டி துறை அம்மன் கோயிலில் முள்ளிவாய்க்கால் கஞ்சியும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
Spread the love