181
டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவன் உயிரிழந்துள்ளார் .
கொழும்புத்துறை பாண்டியன்தாழ்வு பகுதியைச் சேர்ந்த கருணாகரன் ஆரோன் ( வயது -11 ) என்ற யாழ்ப்பாணம் சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவனே உயிரிழந்தார் .
கடந்த 18 ஆம் திகதி காய்ச்சல் காரணமாக அவர் பனடோல் உட்கொண்டுவிட்டு இருந்துள்ளார் . அந்நிலையில் கடந்த 19 ஆம் திகதி மீண்டும் வயிற்றோட்டம் வாந்தி ஏற்பட்டு மாணவன் பாதிக்கப்பட்ட நிலையில், யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் .
அங்கு சிகிச்சை பயனின்றி நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை உயிரிழந்துள்ளார் .
Spread the love