20 ஆவது திருத்தத்திற்கு பதிலாக ஏமாற்றமிக்க மோசடியான திருத்தத்தை கொண்டு வர அரசாங்கம் முயற்சித்து வருவதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை இல்லாதொழிப்பதும்,19 ஆவது திருத்தத்தை பலமிக்கதாக கொண்டு வந்து, 20 ஆவது திருத்தத்தை நீக்குவதும், அனைத்து ஜனநாயக வெற்றிகளையும் உறுதி செய்வதும் அரசாங்கம் கட்டாயம் முன்னெடுக்க வேண்டிய செயற்பாடு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் முன்னெடுக்கும் மோசடி செயற்பாடுகளுக்கும் ஏமாற்று வித்தைகளுக்கும் உடன் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனவும் சஜித் பிரேமதாச கோரியுள்ளார்.