Home இலங்கைஎரிபொருட்களின் விலைகள் எகிறின! போக்குவரத்து கட்டணங்களும் எகிறுகின்றன!

எரிபொருட்களின் விலைகள் எகிறின! போக்குவரத்து கட்டணங்களும் எகிறுகின்றன!

by admin

எரிபொருளின் விலைகளில் இன்று (24.05.22) அதிகாலை 3 மணி தொடக்கம் அமலுக்கு வரும் வகையில் அதிகரிப்பொன்றை இலங்கை அறிவித்துள்ளது.

அந்தவகையில் 92 ரக ஒக்டேனின் விலையானது லீற்றரொன்றுக்கு 338 ரூபாயிலிருந்து 82 ரூபாயால் அதிகரித்து 420 ரூபாயாகக் காணப்படுகிறது.

ஓட்டோ டீசலின் விலையானது லீற்றரொன்றுக்கு 289 ரூபாயிலிருந்து 111 ரூபாய் அதிகரித்து 400 ரூபாயாகக் காணப்படுகின்றது.

இந்நிலையில், சுப்பர் டீசலின் விலையானது லீற்றரொன்றுக்கு 329 ரூபாயிலிருந்து 116 ரூபாய் அதிகரித்து 445 ரூபாயாகக் காணப்படுகின்றது.

தவிர, ஒக்டேன் 95 ரக பெற்றோலின் விலையானது லீற்றரொன்றுக்கு 373 ரூபாயிலிருந்து 77 ரூபாய் அதிகரித்து 450 ரூபாயாகக் காணப்படுகின்றது.

இந்நிலையில், எரிபொருள் விலை மாற்றமானது இறக்குமதி, இறக்குதல், விநியோகித்தல், வரிகளை உள்ளடக்கியே விலை மாற்றமிருப்பதாகத் தெரிவித்த சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர, இலாபம் கணக்கிடப்படவில்லை எனவும் உள்ளடக்கப்படவில்லை எனவும் கூறியுள்ளார்.

முச்சக்கர வண்டிகளுக்கான கட்டணமும் அதிகரிக்கப்படுகிறது!

எரிபொருள் விலை அதிகரிப்புக்கு ஏற்ப முச்சக்கர வண்டிகளுக்கான கட்டணம் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலாவது கிலோமீற்றருக்கான கட்டணம் 90 ரூபாவாகவும், இரண்டாவது கிலோமீற்றருக்கான கட்டணம் 80 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்படவுள்ளதாக அகில இலங்கை முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சுதில் ஜயருக் தெரிவித்துள்ளார்.

பேருந்து போக்குவரத்து கட்டணமும் அதிகரிக்கிறது!

எரிபொருள் விலை திருத்தத்திற்கு அமைய பேருந்து போக்குவரத்து கட்டணம் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளுக்கான கட்டணங்களில் திருத்தத்தை ஏற்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், இன்று (24.05.22) நண்பகல் 12.00 மணிக்குப் பின்னர் பேருந்து கட்டணத்தை அதிகரிக்கவுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் (LPBOA) தெரிவித்துள்ளது.

இந்த விடயம் குறித்து ஆங்கில ஊடகமொன்றுக்கு தெரிவித்த அந்த சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன, குறைந்தபட்ச பேருந்து கட்டணம் 5 ரூபாயால் அதிகரிக்கப்படுமென குறிப்பிட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More