
யாழ்.பலாலி விமான நிலையத்தின் பணிகளை உடன் தொடங்க முடியும் ஆனாலும் காங்கேசன்துறை துறைமுகத்தின் பணிகள் உடனடியாக சாத்தியமற்றது. என அமைச்சர் நிமால் சிறீபால டீ சில்வா தெரிவித்துள்ளார்.
காங்கேசன்துறை துறைமுகம் ஊடான கப்பல் போக்குவரத்தை ஆரம்பிப்பது தொடர்பாக நேற்றைய தினம் சனிக்கிழமை நேரில் ஆராய்ந்த பின்னரே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
துறைமுகம் அருகே அதற்கான வசதிகள் மேம்படுத்த வேண்டும்.
சில கட்டிடங்கள் அமைக்க வேண்டும். அவை ஒப்பந்தங்கள் ஊடாகவே வழங்க முடியும். அதற்கான பணிகளை முன்னெடுக்க வேண்டியுள்ளது. இவற்றினை மேற்கொள்ள குறிப்பிட்ட கால அவகசம் தேவை.
இதனால் உடனடியாக கப்பல் பணி ஆரம்பிக்கும் சாத்தியம் இல்லை. விரைவில் அதற்கான பணிகளை முன்னெடுக்கப்படும் என தெரிவித்தார்.
Spread the love
Add Comment