Home இலங்கைவல்வெட்டித்துறை வாசிகள் எண்மர் தனுஷ்கோடியில் தஞ்சம்

வல்வெட்டித்துறை வாசிகள் எண்மர் தனுஷ்கோடியில் தஞ்சம்

by admin

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை பகுதியை சேர்ந்த 08 பேர் அகதிகளாக தமிழ்நாட்டில் தஞ்சம் அடைந்துள்ளனர். வல்வெட்டித்துறையில் இருந்து படகு மூலம் தமிழகம் தனுஷ்கோடி பகுதிக்கு சென்ற வேளை ராமேஸ்வரம் கடலோர பாதுகாப்பு படையினர் இவர்களை மீட்டு காவல் நிலையம் கொண்டு சென்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 


விசாரணைகளின் பின்னர் அவர்களை மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைக்க ஏற்பாடு செய்யப்படும் என கடலோர பாதுகாப்பு பிரிவினர் தெரிவித்தனர். இலங்கையில் இருந்து கடந்த மார்ச் மாதம் முதல் இன்று வரையில் 103 பேர் தமிழகத்திற்கு அகதிகளாக சென்றுள்ளனர். 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More