யாழ்ப்பாணம் பண்ணை கடற்கரைப் பகுதியில் இனந்தெரியாத முதியவரின் சடலமொன்று இன்றையதினம் புதன்கிழமை மீட்கப்பட்டுள்ளது. கடற்றொழிலாளர்கள் தொழிலுக்காக சென்ற போது சடலமொன்று மிதப்பதைக் கண்டு காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து காவல்துறையினர் சடலத்தை மீட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.